யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் அறிவியல் நகர் தொழில்நுட்ப பீடத்தின் கட்டிடத்தை அரசியல்வாதிகள் திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் போராட்டத்தையடுத்து நிகழ்விற்கு வருகை தரும் திட்டத்தை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கைவிட்டார். எனினும், எதிர்ப்பின் மத்தியில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராசா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வியமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த கட்டிடத்தை திறந்து வைப்பார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தொழில்நுட்ப பீட மாணவர்கள் வீதியில் பேரணியாக வந்து, பல்லைகழக நுழைவாயிலிற்குள் நுழைய முற்பட்டனர். எனினும், கதவை மூடி மாணவர்கள் உள்நுழைவது பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டது.
இதையடுத்து மாணவர்கள் வீதியில் போராட்டம் நடத்தினார்கள்.
அரசியல்வாதிகளால் கட்டிடம் திறக்கப்படுவதை எதிர்ப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
திறப்பு விழா நிகழ்வை முடித்துக் கொண்டு வெளியேறியவர்களும் மாணவர்களால் வழிமறிக்கப்பட்டனர்.