தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து இராணுவ விமானத்தில் இரகசியமாக இலங்கையை விட்டு தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ஷ, மாலைதீவு, சிங்கப்பூர் வழியாக தற்போது தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளார்.
தாய்லாந்து நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கோட்டாபயவை தங்க அனுமதித்துள்ளது. அதில் முக்கியமானது, அவர் தங்கியுள்ள ஹொட்டலை விட்டு வெளியேற முடியாது.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1