25.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

துறைத் தலைவர் பதவி தராவிட்டால் தீக்குளிப்பேன்: யாழ் பல்கலைகழகத்திற்குள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிய பேராசிரியர்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் பொருளியல் துறை தலைவர் பதவியை எனக்கு தராவிட்டால் தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என குறி, பல்கலைகழக வளாகத்திற்குள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் பொருளியல்துறைத் தலைவர், வெளிநாட்டு பயணமொன்றிற்காக ஒரு வருட ஊதியத்துடன் கூடிய ஒரு வருட விடுமுறை எடுப்பதற்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு, விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. குறித்த துறைக்கு பதில் தலைவராக, அந்த துறையில் பணியாற்றிய மற்றொரு பேராசிரியர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், துறைத்தலைவர் பல்கலைகழக மாணவிகளிடமும், சக பெண் விரிவுரையாளர்களிடமும் பாலியல் இலஞ்சம் கோரினார் என்றும், அதனாலேயே பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியவர் அந்த பதவியில் அமர்த்தப்பட்டார் என சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்பட்டிருந்தன.

இதையடுத்து, தனது விடுமுறையை பிற்போட்டு, பழைய துறைத்தலைவர் மீண்டும் அதே பதவியில் மீண்டும் பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் துணைவேந்தர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடந்து கொண்டிருந்த போது, துறைத்தலைவராக பதில் கடமையாற்ற நியமிக்கப்படவிருந்த பேராசிரியர் அந்த மண்டபத்திற்குள் நுழைந்துள்ளார்.

தனக்கு வழங்கப்படவிருந்த துறைத்தலைவர் பதவியை தனக்கே வழங்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் தீக்குளிப்பேன் என கூறி, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

எனினும், துணைவேந்தர் மற்றும் அங்கிருந்தவர்கள் விரைவாக செயற்பட்டு பேராசிரியரை தடுத்து நிறுத்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கழுத்துக்குள் பாய்ந்த தடி அகற்றப்பட்டது: வவுனியா வைத்தியசாலையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை!

Pagetamil

இலங்கையில் 2024 சுற்றுலா வருகைகள் 2 மில்லியனைத் தாண்டியது

east tamil

ஊடகவியலாளர்களுக்கு இனி அனுமதி இல்லை

east tamil

அனுரவை சந்திக்க முடியாவிட்டால் கழுத்தை அறுப்பேன்: வாளுடன் ரகளை செய்தவர் கைது!

Pagetamil

பாத்திரம் கழுவச் சென்ற பெண்ணை இழுத்துச் சென்ற முதலை!

east tamil

Leave a Comment