தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கைகளின்படி, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு இலங்கையில் ஒரு மாதத்திற்கு ஒருவர் வாழ குறைந்தபட்ச தொகையான 12444 ரூபா போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதம் கொழும்பு மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு வசிப்பதற்காக குறைந்தபட்சம் 13,421 ரூபா தேவைப்பட்டது. இது இலங்கையில் ஒரு மாவட்டத்தில் வாழ்வதற்கு தேவையான அதிகூடிய தொகையாகும்.
சனத்தொகை புள்ளிவிபர திணைக்களத்தினால் கடந்த ஜூன் மாதம் மொனராகலை மாவட்டத்தில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து ஒரு மாதம் வாழ 11899 ரூபா தேவைப்பட்டதாகவும், அதுவே ஒரு மாதம் வாழத் தேவையான மிகக் குறைந்த தொகை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1