27.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
குற்றம்

ஒரே வீட்டில் இரண்டு மனைவிகள்: 17 வயது யுவதியை காட்டுக்குள் தூக்கிச் சென்று கட்டிவைத்து வல்லுறவாக்கியவர் கைது!

வீதியால் சென்றுக்கொண்டிருந்த  17 வயதான யுவதியை, காட்டுக்குள் இழுத்துச் சென்று, கைகள்,கால்களை கட்டிவைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகநபர் கைதாகியுள்ளார்.

இரத்தினபுரி தெல்வல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர், கடந்த 11ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதான சந்தேகநபர் இரண்ட திருமணம் செய்தவர். முதலாவது மனைவிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அண்மையில் திருமணம் செய்த இரண்டாவது மனைவி கர்ப்பிணியாக இருக்கின்றார். இரண்டு மனைவிகளும் ஒரே வீட்டில் இருக்கின்றனர்.

துஷ்பிர​யோக குற்றச்சாட்டு, மோட்டார் சைக்கிள்களை களவெடுத்தல், நபர்களின் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தியமை, கசிப்பு விற்பனை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் ​கீழ், இரத்தினபுரி, அத்துருகிரிய மற்றும் மத்துகம ஆகிய நீதிமன்றங்களில் சந்தேநபருக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கசிப்பு வியாபாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட மேற்படி நபர், ஒரு இலட்சம் ரூபாயை தண்டமாக செலுத்தியுள்ளார்.

சம்பவ  தினத்தன்று 17 வயதான யுவதி தன்னுடைய இளைய சகோதரியை பாடசாலைக்கு கொண்டுச்சென்று விட்டுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்த போது, இடையில் மறைந்திருந்த சந்தேகநபர், அந்த யுவதியை காட்டுப் பக்கமாக இழுத்துச் சென்றுள்ளார்.

அப்போது அந்த யுவதி அபாய குரல் எழுப்பி, உதவிக்கு அழைத்துள்ளார். எனினும், யாரும் உதவிச் செய்யவில்லையென பொலிஸாரின் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

மகள் காணாமல் போன விவகாரம் தொடர்பில் யுவதியின் தாய், பொலிஸில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட  தேடுதலின் போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேநபர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், அந்த யுவதி தன்னுடைய அலைபேசியில் இருந்து பொலிஸ் நிலையத்துக்கு பல அழைப்புகளை எடுத்துள்ளார்.  அவ்வாறு அழைப்​பை எடுத்த யுவதி, தான் தன்னுடைய காதலனின் வீட்டில் இருக்கின்றேன். மறுநாள் வீட்டுக்குச் சென்றுவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

அன்றையதினம் கடத்திச் சென்றிருந்த சந்தேகநபர், கைகள், கால்களை   தேயிலை செடியுடன் கட்டிவைத்து அன்றிரவு 11 மணியளவிலேயே யுவதியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், பொலிஸில் முறைப்பாடு செய்யவேண்டாம் என்றும் அந்த யுவதியிடம் சந்தேகநபர் ​கேட்டுக்கொண்டுள்ளார் என்றும் விசாரணைகளின் ஊடக கண்டறியப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட அன்றையதினம் காலையில் இருந்து மறுநாள் காலை வரையிலும் தன்னுடைய கைகள், கால்கள் கட்டப்பட்டிருந்தன என்றும், அன்றையதினம் இரவு 11 மணியளவில் கட்டுகளை அவிழ்த்துவிட்டார் என்றும் யுவதி செய்திருந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யாவிடின், தனது வீட்டை விற்று பணம் தருவதாகவும், துஷ்பிரயோத்துக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் சந்தேகநபர் தெரிவித்தார் என யுவதி செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

4 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்த 2வது கணவன்!

Pagetamil

வடமராட்சியில் 12 சைக்கிள் திருடிய எமகாதகன் கைது!

Pagetamil

Leave a Comment