தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளை ஒரு சுற்று கலந்துரையாடலுக்கு அழைக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஓகஸ்ட் 23ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு அத்தகைய கட்சிகளின் செயலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்வைத்த முன்மொழிவுகளை அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஆணைக்குழு முக்கியமாக உத்தேசித்துள்ளது.
மேற்படி முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து வருவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் பதிவு செய்யப்பட்ட சுமார் 50 அரசியல் கட்சிகள் தற்போதைய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 அரசியல் கட்சிகளுடன் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே கலந்துரையாடியுள்ளது.