நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் பழுதடைந்துள்ளது. தொழில்நுட்ப ஊழியர்கள் தற்போது பிழையை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் இரண்டாம் அலகு தற்போது திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதால், மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றது.
மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதற்கு மேற்கு கடற்கரை மற்றும் ஏனைய எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1