அண்மையில் மித்தெனியவில் உள்ள இறுதிச் சடங்கு நிலைய உரிமையாளரின் மரணம் தொடர்பில் T-56 ரக துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி தனிப்பட்ட தகராறு காரணமாக இறுதிச் சடங்கு நிலைய உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் குற்றத்தில் ஈடுபட்ட மற்றுமொருவரையும் தங்காலை குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களில் ஒருவர் கொலையை செய்ய ரூ.500,000 ரூபா பெற்றுள்ளார். அந்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட கைத்தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் 35 மற்றும் 28 வயதுடைய விதாரந்தெனிய மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
அவர்கள் இன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1