இந்த வருடத்தில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் பொரலஸ்கமுவவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதான பிரபோத குமார எனப்படும் கதிரா என்பவரே கைதானார்.
டுபாயில் கைதாகியுள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் கரக் ஹட்டாவின் கூட்டாளியான இவர், பாதாள உலக நபராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரக் ஹட்டாவின் ஆலோசனையின் பேரில் அவர் பல கொலைகளை செய்துள்ளார்.
கைது செய்யப்படும் போது அவரிடம் துப்பாக்கி, மூன்று தோட்டாக்கள் மற்றும் 17 கிராம் ஹெரோயின் இருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1