அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரின் மகளுக்கு சொந்தமான 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான வைரம் பதிக்கப்பட்ட தங்க மோதிரத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சரின் மகளும் சகாக்களும் யால தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வார இறுதியில் (13) தங்கியிருந்த போதே மோதிரம் திருடப்பட்டுள்ளது.
மேற்படி ஹோட்டலுக்கு அருகிலுள்ள கட்டுமான தளத்தில் பணிபுரிந்து வந்த கொத்தனார் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சரின் மகள் குளிக்கும் போது ரிசார்ட்டில் உள்ள திறந்த குளியலறையின் சுவரில் தனது மோதிரத்தை கழற்றி வைத்துள்ளார். குளித்து விட்டு செல்லும் போது அதனை எடுக்க மறந்து விட்டார்.
அங்கு வந்த கொத்தனார் மோதிரத்தை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னர் திருடன் அடையாளம் காணப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1