பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பலான ‘PNS தைமூர்’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (12) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வ மரியாதையைய வழங்கி கப்பலை வரவேற்றனர். இந்த கப்பல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இலங்கையில் தரித்திருக்கும்.
இக்கப்பல் 134 மீற்றர் நீளம் கொண்டதுடன் பிரதம அதிகாரியாக கப்டன் எம்.நஸீர் தலைமையில் 169 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர்.
இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் இலங்கை கடற்படையினர் பங்கேற்க உள்ளனர்.
எதிர்வரும் 15ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படும் வேளையில், மேற்குக் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து கடற்படை கூட்டுப் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1