யாழ்ப்பாணத்தில் இன்று இரவு நடந்த வாள்வெட்டில் படுகாயமடைந்தவர் யாழ் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை வீதி, மனோகரா சந்தி பகுதியில் இன்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
யாழ் நகரில் தொலைபேசி வர்த்தக நிலையம் நடத்தி வரும் இளைஞன் மீதே வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சில மாதங்களின் முன்னர் யாழ் மாவட்டத்திலுள்ள அங்கஜன் இராமநாதனின் அலுவலகமொன்றில், அங்கஜன் இராமநாதனின் படத்திற்கு தீயிட்டமையால் கைதான இளைஞனே தாக்குதலிற்கு இலக்காகினார்.
இது தனிப்பட்ட காரணங்களினால் நடந்த வாள்வெட்டு என பொலிசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1