நிலாவெளி கடற்கரையின் கோபாலபுரம் பகுதியில் நீராடச் சென்ற இரண்டு யுவதிகள், கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டனர்.
அனுராதபுரம் சியம்பலகஹகம பிரதேசத்தைச் சேர்ந்த இரு யுவதிகள் விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் நிலாவெளி கடற்கரைக்கு வந்துள்ளனர். கடலில் நீராடிக் கொண்டிருந்த போது 21, 22 வயதான யுவதிகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரும் கடற்படை பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து மீட்டனர்.
அவர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்ட போது ற்றுலாப் பயணிகள் அதிகளவில் கடற்கரையில் இருந்தனர். யுவதிகளின் அலறல் சத்தம் கேட்டு கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், 150 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு இளம் யுவதிகளையும் பாதுகாப்பான முறையில் மீட்டுள்ளனர்.