ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகைக்குள் பிரவேசித்த சாதாரண குடிமக்களை வேட்டையாடுவதே பொலிஸ் அதிகாரிகளின் அண்மைக்கால கடமையாக மாறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கணேசன் இன்று பாராளுமன்றத்தில் பேசுகையில், குறிப்பிட்ட சில பாதுகாப்பு மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகளை அவதானித்த பின்னரே இவ்வாறான இடங்களுக்குள் நுழைய மக்கள் தூண்டப்பட்டதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் பல பொலிஸ் அதிகாரிகள் சீருடையில் உடற்பயிற்சி கூடங்களில் இருந்ததை, பியானோ வாசிப்பதை காணொளிகள் மூலம் மக்கள் பார்த்து, அந்த இடங்களை பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும் வந்ததாக குறிப்பிட்டார்.
தற்போது புகைப்படம் எடுத்ததற்காகவோ அல்லது அவ்வாறான இடங்களுக்குச் செல்வதற்காகவோ பொலிசார் மக்களை வேட்டையாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.