அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தில் நம்பிக்கை வைத்து பொதுமக்கள் ஓகஸ்ட் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
9ஆம் திகதி போராட்டங்களுக்கு சுனாமி போன்று மக்கள் திரள்வார்கள் என கூறப்பட்டதாகவும் அது பலனளிக்கவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார். சுற்றுலாத் துறையும் படிப்படியாக மீண்டு வரும் என நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது குறிப்பிட்டார்.
அந்நியச் செலாவணியை உருவாக்குவதற்கான முயற்சிகளை அமல்படுத்த வேண்டும் என்றார்.
எதிர்ப்புக்கள், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஓகஸ்ட் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்றும் கூறினார்.
ஆடை மற்றும் ஏற்றுமதி துறைகள் தடையின்றி தொடர்வதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லொக்குகே, ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகளினால் நாடு தற்போது இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.
2/3 பெரும்பான்மையைப் பெற்றிருந்த முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதி அதிக அதிகாரத்தைப் பெறுவதற்காகவே அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
அரசியல் அனுபவம் இல்லாத கோட்டாபய ராஜபக்ச, தன்னிச்சையாக நாட்டைக் கொந்தளிப்பில் ஆழ்த்தும் வகையில் செயல்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலவத்துவல குற்றஞ்சாட்டினார்.