தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரணைக்கு 4 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று புதன்கிழமை (10)மன்னார் பொலிஸ் ஊடாக விசாரணை அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த பெப்பிரவரி மாதம் 18 ஆம் திகதியும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1