சாதாரண தபால் கட்டணங்கள் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும்.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி, சாதாரண கடித தபால் கட்டணமானது ரூபா. 15 இலிருந்து ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணம் ரூ. 45 என்பது ரூ.110 ஆக உயர்த்தப்படும்.
தபால் அலுவலக கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களைத் தொடர்ந்து, சாதாரண கடிதம், வணிக அஞ்சல், பொதி தபால் மற்றும் மொத்த அஞ்சல் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.
இந்த மாத தொடக்கத்தில், வெளிநாட்டு தபால் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டன. ஜனவரி 2018க்குப் பிறகு முதன்முறையாக விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1