27.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்ட கடனை இடைநிறுத்திய சீனா!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீனாவின் அரசுக்கு சொந்தமான Exim வங்கி நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இந்த திட்டத்தை முன்னெடுப்பதில் அரசாங்கம்  புதிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.

கடவத்தைக்கும் மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீனர்கள் உடனடியாக வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும், இதன் விளைவாக அங்கு பணியாற்றிய 2,000 உள்ளூர் மக்களும் வேலையிழக்கும் ஆபத்தில் இருப்பதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவைக் கருத்தில் கொண்டு சீனாவின் எக்ஸிம் வங்கியின் நிதி வெளியீடு முக்கியமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திறைசேரி வட்டாரங்கள் தெரிவித்தன.

கடனை இடைநிறுத்துவதன் மூலம் திட்டம் தாமதமடையும். இதனால்,  சீனாவின் உலோகவியல் கட்டுமான நிறுவனத்திடமிருந்து (MCC) இலங்கை அரசாங்கத்திற்கு அபராதம் விதிக்கப்படும் அபாயமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதுவரை இலங்கை அரசாங்கத்தின் 33 பில்லியன் ரூபா நிதியில் சுமார் 32 வீதமான வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

பாறைகளை வெடிக்கத் தேவையான டீசல் மற்றும் வெடிமருந்துகள் இல்லாததால் சமீபத்திய மாதங்களில் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமான திட்டத்திற்கு ஒரு நாளைக்கு 40,000 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.

“பொருளாதார நிலைமை மேம்படும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும் மற்றும் திட்டத்தை தொடர கடன்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று நிதி அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாத்திரம் கழுவச் சென்ற பெண்ணை இழுத்துச் சென்ற முதலை!

east tamil

இரவு நேர போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபரின் தொடர் விசேட அறிவுறுத்தல்

east tamil

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர்

east tamil

மின் வடங்கள் திருடப்படுவதை தடுக்க போக்குவரத்து அமைச்சின் தீர்மானம்

east tamil

மனைவியை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான திருகோணமலை கடற்படை சிப்பாய் கைது!

Pagetamil

Leave a Comment