ஹபராதுவ, தல்பே பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த 55 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவரின் சடலம் நேற்று (06) வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும், வீட்டின் உரிமையாளர் சனிக்கிழமை இரவு உணவு கொண்டு சென்றபோது, துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த வெளிநாட்டவரின் பிரேத பரிசோதனை கராப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெறவிருந்ததுடன், ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1