கைது செய்யப்பட்ட தொழிற்சங்கவாதி ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது கைது சட்டப்பூர்வமானது என்றும், சட்டத்தை மீறியவர்களையும் மற்றவர்களையும் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் உள்ளது என்றும் ஸ்டாலினிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முறைமை மாற்றத்தை வலியுறுத்தும் போராட்டக்காரர்களை தாம் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
போராட்டத்தின் நல்ல பக்கமும், கெட்ட பக்கமும் உண்டு, அதில் உள்ள நல்ல அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். சட்ட விவகாரங்களில் குறைபாடுகள் இருப்பின் பேசித் தீர்த்து கொள்வோம் என்று கூறினார்.
இதேவேளை, ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.