தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பு இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் எனவும், ஒவ்வொரு வாகனத்திற்கும் இவ்வாரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவு எதிர்வரும் வாரமும் அமுல்ப்படுத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
ருவிட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் தரவுகளை பகுப்பாய்வு செய்த பிறகு, அடுத்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தவரை தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தேசிய எரிபொருள் விநியோக அட்டை QR முறை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கடந்த முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1