26.3 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

அவசரகால சட்டத்தில் சில திருத்தங்கள்!

ஜூலை 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட அவசரகால சட்டத்தின் சில சரத்துக்கள் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை (05) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, தேடுதல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 365 (அ) மற்றும் 365 (ஆ) சரத்துகள் நீக்கப்பட்டு அதே பிரிவின் 408 மற்றும் 410 முதல் 420 வரையான சரத்துகள் அவசரகாலச் சட்டங்கள் தொடர்பாக சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், உயர் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனைகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர உத்தரவுகளின் கீழ், குற்றவியல் சட்டத்தின் 365, 365 (அ) மற்றும் 365 (ஆ) ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

Leave a Comment