கூகுள் மப் (Google Map) உதவியோடு சென்ற கார் ஓடைக்குள் மூழ்கியுள்ளது. காரிலிருந்த 3 மாத குழந்தை உள்ளிட்ட 4 பேர், பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டனர்.
கேரள மாநிலம், திருவாத்துக்கல் நாட்டகோம் புறவழிச்சாலை அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் கார் எர்ணாகுளத்தில் இருந்து கும்பநாடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பகுதியில் சில நாட்களாக அடைமழை பொழிந்து, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரவு நேரங்களில் ரோட்டில் வெளிச்சம் குறைவாக உள்ளது. பாரேச்சல் பாலம் அருகே உள்ள ஓடைக்குள் கார் நுழைந்துள்ளது.
வைத்தியர் சோனியா, அவரது தாய் ஷோசம்மா, உறவினர் அனீஷ் மற்றும் சோனியாவின் மூன்று மாத குழந்தை ஆகியோர் காரில் பயணம் செய்தனர்.
கார் ஓடையில் இறங்கியதை பார்த்து அருகில் உள்ள கடையில் இருந்த பெண் சத்தமிட்டு அலறியதையடுத்து, அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காருக்குள் இருந்தவர்களை மீட்டனர்.
காரை செலுத்தியவர் கூகுள் மப்ஸ் வழி காட்டுதலின்படி காரை செலுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.