பிக்குகளிற்கு தானம் வழங்குவது பௌத்த மத மரபில் முக்கியமான அங்கம். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவையுடைய பொருட்கள் தானமாக வழங்கப்படுவது மரபு. எனினும், இம்முறை பிக்குகளிற்கு தானமாக எரிபொருள் வழங்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பிடிகல அத்துகோரல தேயிலை குழுமத்தின் ஸ்தாபகர் மர்ஹூம் டி.டபிள்யூ.அத்துகோரளவின் 11வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (4) பிட்டிகல அத்துகோரல தேயிலை தொழிற்சாலையில் பிக்குகளிற்கு தானம் வழங்கி வித்தியாசமான பூஜை ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, ஒவ்வொரு பிக்குவிற்கும் 10 லிட்டர் எரிபொருள் வழங்கப்பட்டது.
தான் முதன்முறையாக இதுபோன்ற தானத்தை பெற்றதாகவும், இந்த தானம் இன்றைய நிலையில் விலை மதிப்பற்றது என்றும் பிக்கு ஒருவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1