திருகோணமலை வெளி துறைமுக பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விபத்திற்குள்ளான சிறிய மீன்பிடி படகில் இருந்த மூன்று மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான P 244 என்ற கரையோர ரோந்து கப்பல் திருகோணமலை வெளி துறைமுக கடற்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த போது, அக்கடலில் கவிழ்ந்த சிறிய மீன்பிடி கப்பலை அவதானித்து, கடலில் தவறி விழுந்த மூன்று மீனவர்களை மீட்டுள்ளனர்.
கப்பல் மூலம் அவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.
இவர்கள் சீனன்குடா மற்றும் கிண்ணியா பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் கடற்படையினர் குறிப்பிடுகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1