காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பில் பொலிஸாரும் முப்படையினரும் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் இன்று உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 09 ஆம் திகதி முதல் தாம் கோட்டகோகம போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னர் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றதாகவும் மனுதாரர் கூறுகிறார்.
“கோட்டகோகம” ஆயுதப் படைகளால் அழிக்கப்பட்ட பின்னர், ஜூலை 25 மாலை தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பில் இருந்து தனக்கு எதிராக காவல்துறை பயணத் தடையைப் பெற்றுள்ளது என்பதை அறிந்து கொண்டதாக மனுதாரர் கூறுகிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1