25.2 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இந்தியா

என்.டி.ராமாராவின் இளைய மகள் உமா மகேஷ்வரி தற்கொலை!

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் இளைய மகள் உமா மகேஷ்வரி (52) தற்கொலை செய்து கொண்டார்.

தெலங்கு தேசம் கட்சியின் நிறுவனரான என்.டி. ராமாராவின் இளைய மகள் உமா மகேஷ்வரி, ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் மன உளைச்சல் மற்றும் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

என்.டி. ராமாராவுக்கு 12 பிள்ளைகள். அவர்களில் இளையவர் உமா மகேஷ்வரி.

தற்கொலை குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைந்து வந்த காவலர்கள், உடலைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

உமா மகேஷ்வரி, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி மற்றும் மத்திய இணை அமைச்சரும் பாஜக தலைவருமான டகுபதி புரந்தேஸ்வரியின் சகோதரியாவார்.

என்.டி.ராமாராவுக்கு 8 மகன்கள், 4 மகள்கள். நான்கு மகள்களிலேயே உமா மகேஷ்வரிதான் இளையவர். தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த உமா மகேஷ்வரியின் மகளின் திருமணம் அண்மையில் வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அதில் அவரது குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

1996ஆம் ஆண்டு தனது 72வது வயதில் மரணமடைந்த என்.டி.ராமாராவின் 8 மகன்களில் ஏற்கனவே மூன்று பேர் மரணமடைந்து விட்டனர்.

கடந்த சில காலமாக உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உமா மகேஷ்வரி இன்று தற்கொலை செய்து கொண்டிருப்பது அவரது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் – இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

east tamil

‘பெரியார் என்ன சமூகநீதி செய்தார்… பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது’- சீமான்

Pagetamil

5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை: காதலனின் துரோகம் மாணவியின் வாழ்வை சிதைத்த கொடூரம்

east tamil

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Pagetamil

“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Pagetamil

Leave a Comment