முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் தங்கும் விடுதி மற்றும் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது.
புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சில நாட்களாக எரிபொருள் வரவில்லை. நாட்கணக்கில் மக்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று பிரதேச செயலக வாகனம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று டீசல் நிரப்பியது. இதன்போது, சிறிய கொள்கலன் ஒன்றில் பெற்றோல் நிரப்பப்பட்டு, வாகனத்தில் ஏற்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
இதை தொடர்ந்து பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், நேற்று இரவு, பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ குளியலறையிலிருந்தும், அலுவலக களஞ்சியசாலையிலிருந்தும் 110 லீற்றர் டீசல், 10 லீற்றர் பெற்றோல், 4 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டன.
பிரதேச செயலாளருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிவான் நிதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
(மேலே இணைக்கப்பட்டது சித்தரிப்பு படம்)