அம்பலாங்கொட, கலகொடவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இறுதிச் சடங்கு ஒன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் T56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அம்பலாங்கொட, உரவத்தையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1