பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை திங்கட்கிழமை மேலும் மேம்படும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் 80 சதவீத ஆசிரியர்களும், 73 சதவீத ஆசிரியர்களும் பாடசாலைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை போக்குவரத்து சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பாடசாலை வாகனம் மற்றும் தனியார் பஸ் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியதை அடுத்து, பாடசாலை போக்குவரத்து முறையை மேம்படுத்தும் வகையில் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பல்வேறு காரணங்களால் தாமதமான பல தேசியப் பரீட்சைகள் நடாத்தப்பட்ட நிலையில், நிலுவையில் உள்ள எஞ்சிய பரீட்சைகளை விரைவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கூடிய விரைவில் வழமையான பரீட்சை கால அட்டவணைக்கு திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.