கம்பஹா மேல் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சமன் ரோஹித பெரேரா என்ற ‘பஸ் பொட்ட’ உயிரிழந்துள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
மேலும் மூன்று பேர் காயமடைந்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நால்வரும் நீதிமன்ற விசாரணைக்காக வந்து வாகனத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச்சூட்டின் போது வாகனத்தில் 6 பேர் இருந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1
1