26.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

எரிபொருள் வழங்குமாறு கோரி பணிபகிஸ்கரிப்பு!

முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்குமாறு கோரி வவுனியா மாவட்ட சுகாதார சேவைகள் தொழிற்சங்களால் ஆர்பாட்டபேரணியும், பணி பகிஸ்கரிப்பும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய ஆர்ப்பாட்ட பேரணி மன்னார் வீதி சந்தியை அடைந்து அங்கிருந்து வவுனியா மாவட்டசெயலகம் முன்பாக முடிவடைந்தது.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது…..

உரியநேரத்தில் எரிபொருள் கிடைக்காமையினால் எமது ஊழியர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். அத்தியவசிய சேவையாக இருந்தும் எமக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு இதுவரையில் தகுந்த முறைமை உருவாக்கப்படவில்லை.

சுகாதாரத்துறைசார்ந்த அனைத்து மட்டத்தினரும் வரிசைகளில் காத்திருப்பதால் வைத்தியசாலைகளின் சேவைகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரச அதிபருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கப்பெறவில்லை. வடக்கில் எமது மாவட்டத்தில் மாத்தி்ரமே இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளது.

எனவே எமக்கான ஒரு தீர்வு கிடைக்காதவிடத்து தொடர் தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தள்ளப்படுவோம் என்றனர்.

இதேவேளை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வவுனியா மாவட்ட செயலக வளாகத்துக்கு முன்பாக நின்று கோசங்களை எழுப்பினர்.

இதனையடுத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் அரச அதிபருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலை அடுத்து போராட்டம் முடிவிற்கு வந்தது.

குறித்த பணிபகிஸ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பணிப்பாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

Leave a Comment