அம்பாறை பொத்துவிலில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இன்று (23) காலை 11 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்
பொத்துவில் லகுகலையைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் 51 வயதுடைய திசாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொத்துவில் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை பெறுவதற்காக இன்று காலையில் இருந்து காத்திருந்தவர், திடீரென மயக்கமுற்று கீழே வீழ்ந்து மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
இவர் ஏற்கெனவே இருதய சத்திர சிகிச்சை மோற்கொண்டவர் எனவும் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1