யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அது தொடர்பான விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை கிளைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தற்போது, வெளிநாட்டு கற்கைநெறியை தொடரும் அவர், விரைவில் யாழ் போதனா வைத்தியசாலையில் பணியில் இணையவுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யாமல், அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் பணியில் இணைக்கப்பட்டால், தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளது.
தாய்ச்சங்கத்திற்கு இது தொடர்பான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. தாய் சங்கம் அந்த கடிதத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளரிற்கு அனுப்பி வைத்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1
1