கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐ.ஓ.சீ எரிபொருள் நிலையத்தில் கடந்த இரு நாட்களாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த 58 வயதுடைய நபரொருவர் மயக்கமுற்ற நிலையில் இன்று (22) உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா முனைச்சேனை பகுதியைச் சேர்ந்த முகம்மது ஷரீஃப் ரம்லான் (59) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரின் சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-ரவ்பீக் பாயிஸ்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1