உயர்தர வகுப்புகளில் கலந்து கொண்ட நான்கு மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுத்த சம்பவம் தொடர்பில், மேலதிக வகுப்புகளை நடத்தும் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியர் ரம்பொடகல்ல மற்றும் மாவத்தகம பிரதேசங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதாகவும் சந்தேக நபர் பாடசாலை ஆசிரியர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு மாணவிகளையும் அவ்வப்போது காரில் ஏற்றிச் செல்வதாகவும், மேலும் கற்றுக்கொடுக்கப் போவதாகக் கூறி காரை நிறுத்திவிட்டு, மாணவிகளை நிர்வாணப் புகைப்படங்களை எடுத்ததாக நான்கு மாணவிகளும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் அந்த நபரின் செல்போனை சோதனையிட்டபோது, அதில் நான்கு மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் பதிவாகியிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1