தம்புள்ள, கந்தளம, கும்பக்கடன்வல குளத்தில் தாய் மற்றும் தந்தையுடன் நீரில் நீந்திக் கொண்டிருந்த 7 வயது சிறுவனை முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முதலையால் பிடிக்கப்பட்ட சிறுவனை கண்டுபிடிக்கும் பணியில் உயிர்காப்பாளர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களுடன் இணைந்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கும்புக்கடன்வல பிரதேசத்தை தரம் 2 இல் கல்வி கற்கும் சனுத் சத்சர என்ற சிறுவனே முதலையால் பிடிக்கப்பட்டுள்ளான்.
இந்த ஏரியில் முதலைகள் இருப்பதால் பலர் குளிப்பதில்லை என குழந்தையின் தந்தை குறிப்பிட்டுள்ளார். பல நாட்களாக, தங்கள் மகன் இந்த ஏரியில் குளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததாகவும், மகனின் ஆசையை நிறைவேற்ற குடும்பத்தார் அனைவரும் முதல் முறையாக இந்த குளத்தில் குளிக்க வந்ததாகவும் குறிப்பிட்டார்.