இராணுவத்தினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் கிளர்ச்சியாளர்களின் கைகளில் சிக்கினால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஆயுதங்களை விரைவில் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவத் தளபதிகளுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் அதிகாரம் வழங்குவதற்கு நேற்று (15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று அமைச்சரவை கூடியது.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அதிகாரங்களை முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு வழங்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் எம்.பி.க்கள் சுதந்திரமாக சந்திப்பதற்கான உரிமையை பாதுகாப்பதற்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் குறிப்பிட்ட அரசியல் கட்சியினால் இரவு குழப்பம் ஏற்பட்டதாக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரிடம் இருந்து திருடப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும் கண்டுப்பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்பு பிரிவிற்கு அதிகாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.