அட்டகாசத்தில் ஈடுபட்டவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

Date:

நோர்வூட் பிரதேச சபையின் இ.தொ.கா உறுப்பினர் சூசை அலக்ஸாண்டர் எரிவாயு சிலிண்டர்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்த வரிசையில் நிற்கும் பொது மகன் ஒருவரை அச்சுறுத்தி, தாக்க செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர் மீது விசாரணை நடைப்பெறும் எனவும், அதுவரை கட்சியில் இருந்து இடைநிறுத்துவதாகவும் இ.தொ.காவின் பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் சூசை அலக்ஸாண்டர் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட ஒழுக்காற்று குழு, வெகுவிரைவில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது என்று காங்கிரஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதுபோன்ற செயல்களுக்கு இ.தொ.கா ஒருபொழுதும் அனுமதியளிக்காது என்பதோடு குறித்த பிரதேச சபை உறுப்பினரின் சகல கட்சி உறுப்புரிமைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நீக்கியதாக இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்