25.5 C
Jaffna
December 29, 2024
Pagetamil
இந்தியா

ராமேசுவரம் – தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து: தமிழக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

ராமேசுவரம் – தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாநில நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

பாம்பன் கால்வாயைத் தூர்வாரும் பணி தொடர்பாக பாம்பனில் ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சாகர் மாலா திட்டத்தின் கீழ் பாம்பன் கால்வாயைத் தூர்வாருவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். பாம்பன் கால்வாயை 10 மீட்டர் வரையிலும் தூர்வாரி ஆழப்படுத்தினால் இலங்கையைச் சுற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் பாம்பனைக் கடந்து செல்வதுடன் பயண தூரமும் குறையும்.

மேலும், ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகுப் போக்குவரத்தை விரிவுபடுத்துதல், ராமேசுவரம் துறைமுகத்துக்கான நிர்வாக அலுவலகம் அமைப்பது மற்றும் ராமேசுவரத்திலிருந்து மீண்டும் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்கு வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வையும் மேற்கொண்டேன், என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

Pagetamil

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு

Pagetamil

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

Leave a Comment