ஜனாதிபதியின் பயண இலக்கு செவ்வாய் கிரகமா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
செல்ல வேண்டிய இடத்திற்கு சென்ற பின்ன் ராஜினாமா கடிதத்தை அனுப்புவேன் என்று கூறி ஜனாதிபதி ஏன் நேரத்தை வீணடிக்கிறார் என்று தெரியவில்லை என்று கூறிய முஜுபுர் ரஹ்மான், ஜனாதிபதி எடுத்துக் கொண்ட நேரமானது உலகின் மூலை முடுக்கெல்லாம் செல்ல போதுமானது என்றும் கூறினார்.
இலங்கையர்கள் இருக்கும் எந்த நாட்டிற்கும் ஜனாதிபதியால் செல்ல முடியவில்லை எனவும், ஜனாதிபதி வேறு கிரகத்தை தேடிக் கொண்டிருப்பதால் தான் ராஜினாமா கடிதத்தை அனுப்ப இவ்வளவு கால அவகாசம் எடுத்துக் கொள்கிறார் என்பதில் நியாயமான சந்தேகம் இருப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1