ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க பிரிட்டன் அரசாங்கம் தனது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயல்படுமாறு பிரித்தானியாவின் லிபரல் டெமோக்ரட் கட்சியின் தலைவர் எட் டேவி கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய எட் டேவி, ராஜபக்ச அரசின் ஊழல், வரிக் குறைப்பு, பாதுகாப்புச் செலவினங்கள், கொடூரமான காவல்துறை அதிகாரங்கள் போன்றவற்றால் இலங்கையில் பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பொருளாதார மற்றும் அரசியல் பொதி ஒன்றை ஐக்கிய இராச்சிய அரசிடம் கோரியுள்ளார்.
லிப் டெம் தலைவர் மேலும் கூறுகையில், அரசியல் பொதிக்கு கூடுதலாக பொருளாதாரப் பொதியை வழங்க இங்கிலாந்து அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற பங்காளிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
பிரித்தானியாவின் லிபரல் டெமோக்ரட் கட்சியின் தலைவர் எட் டேவி, தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் உட்பட நாட்டில் உள்ள அனைவரின் மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.