ரணில் உத்தரவிற்கு கீழ்ப்படியாதீர்கள்: ஆயுதப்படைகளிடம் பொன்சேனா கோரிக்கை!

Date:

சட்ட விரோதமான முறையில் ஜனாதிபதி அதிகாரத்தைப் பெற்று, செயற்பாட்டு ஜனாதிபதியாகத் தன்னை அறிமுகப்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் சட்ட விரோதமான மற்றும் அரசியலமைப்புக்கு முரணான கட்டளைகளைப் பின்பற்றுவதைத் தவிர்க்குமாறு முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஆயுதப் படைகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். .

அவர் தனது முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், துப்பாக்கிச்சூடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மக்களிடையே வதந்தி பரவி வருவதாகவும், ஆயுதப்படையினருக்கும், நாட்டின் சாதாரண நிராயுதபாணியான பொதுமக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை மதிக்கும் மற்றும் ஒழுக்கமான இராணுவம் என்ற வகையில், சாதாரண நிராயுதபாணியான பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தவிர்த்து, ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக உங்கள் ஆயுதங்களை உயர்த்துங்கள் என்று மீண்டும் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில் தானும் போராட்ட களத்தில் நின்று மக்களுடன் முன்னணியில் நின்று மக்கள் போராட்ட வெற்றிக்காக தன்னை அர்ப்பணிப்பதாக அவர் தனது குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்