இராணுவ விமானத்தில் மாலைதீவுக்கு தப்பிச் சென்றார் கோட்டா!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டைவிட்டு  வெளியேறி விட்டார்.

விமானம் மூலம் அவர் மாலைதீவுக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (13) அதிகாலை விமானப்படை விமானம் மூலம் அவர் தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று அவர் பதவிவிலகவுள்ள நிலையில், பதவிவிலகுவதற்கு முன்னர் தப்பியோட விரும்பியிருந்தார். அவர் தடுத்து வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக பதவி விலகுவதற்கு முன் வெளிநாடு செல்ல விரும்பியதாக நம்பப்படுகிறது.

நாட்டின் பிரதான விமான நிலையத்திலிருந்து, விமானப்படைக்கு சொந்தமாக அன்டனோவ் -32 ரக விமானத்தில் மாலைதீவுக்கு சென்றதாக, குடிவரவு, குடியகல்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டி  AFP செய்தி வெளியிட்டுள்ளது.

 “அவர்களின் கடவுச்சீட்டுகள் முத்திரையிடப்பட்டு அவர்கள் சிறப்பு விமானப்படை விமானத்தில் ஏறினர்,” என்று செயல்பாட்டில் ஈடுபட்டிருந்த குடிவரவு அதிகாரி  கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் ‘த டெர்மினேட்டர்’ என்று சிங்கள மக்களால் அழைக்கப்பட்ட 73 வயதான கோட்டாபய விமானம் வழியாக தப்பியோடுவது, கடந்த 24 மணித்தியாலங்களாக இழுபறியில் இருந்தது.

அவர் வணிக விமானத்தில் டுபாய்க்கு செல்ல விரும்பினார். ஆனால் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் விஐபி சேவைகளில் இருந்து விலகி, அனைத்து பயணிகளும் பொது கவுண்டர்கள் வழியாக செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர்.

எனினும், பொதுமக்கள் தன்னை கண்டால் ‘கண்டம் பண்ணி விடுவார்கள்’ என்பதை நன்கறிந்திருந்த கோட்டாபய, அந்த வழியில் செல்ல மறுத்து விட்டார்.

இதன் விளைவாக திங்களன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்லும் நான்கு விமானங்களை தவறவிட்டார். அன்றிரவு, விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விமானப்படை தளத்தில் கோட்டாவும், மனைவியும் அடைக்கலமாகியிருந்தனர்.

இதேவேளை, இந்தியாவில் இராணுவ விமானத்தில் சென்று தரையிறங்க கோட்டா அனுமதி கோரியதாகவும், எனினும், அனுமதி உடனடியாக கிடைக்கவில்லையென்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு கட்டத்தில், கோட்டா தரப்பு கடல் வழியாக தப்பிச் செல்லும் நோக்கில் செவ்வாயன்று கடற்படை தளத்திற்குச் சென்றது.

இறுதியாக, விமானப்படை விமானத்தில் தப்பியோடியுள்ளார்.

மாலைதீவிலுள்ள உயர்பாதுகாப்புடன் கூடிய விடுதியொன்றில் அடுத்த ஓரிரு நாட்கள் தங்கியிருந்த பின்னர், அவர்கள் அங்கிருந்து டுபாய்ப்கு செல்வார்கள் என தெரிகிறது.

இதேவேளை, மாலைதீவு விமான நிலையத்தில் அசாதாரண பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

Vavada online kazino Latvij klientu atbalsts un sazias kanli.1420

Vavada online kazino Latvijā - klientu atbalsts un saziņas...

GRANDPASHABET CANLI CASNO BAHS.19560 (2)

GRANDPASHABET CANLI CASİNO & BAHİS ...

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்