நடிகர் விக்ரம் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதி

Date:

நடிகர் விக்ரம் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். 1990இல் வெளியான ‘என் காதல் கண்மணி’ படத்தின் மூலம் தமிழ்த் திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இயக்குநர் பாலாவின் ‘சேது’ தொடங்கி பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ திரைப்படம் விரைவில் திரைக்க வரவுள்ளது.

இதனிடையே, மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என தகவல் வெளியானது.

இது தொடர்பாக விக்ரம் தரப்பில் விசாரித்தபோது, ”காய்ச்சல் காரணமாக நேற்று இரவு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், இன்று காலை சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றபடி அவருக்கு மாரடைப்பு என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. தற்போது விக்ரம் நலமுடன் இருக்கிறார்” என தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்