லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) 2022க்கான வீரர்களின் வரைவு நேற்று முடிவடைந்தது. இதில் கார்லோஸ் பிராத்வைட், டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் இமாட் வாசிம் ஆகியோர் அதிக விலையுள்ள சர்வதேச வீரர்களாக பட்டியலிடப்பட்டனர்.
மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் டி20 கப்டன் பிராத்வைட் கண்டி வாரியர்ஸ் அணியில் இணைகிறார்.
ஐபிஎல் 2022ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தென்னாப்பிரிக்கா ஓல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் கொழும்பு ஸ்டார்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானின் மூத்த ஓல்-ரவுண்டர் இமாத் வாசிம் காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
LPL 2022 வரைவில் மொத்தம் 353 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர், இதில் 180 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 173 இலங்கை வீரர்கள் வரிசைப்படுத்தப்பட்டனர்.
கொழும்பு ஸ்டார்ஸ், யாழ் கிங்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ், கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் பல பிரிவுகளின் கீழ் வீரர்களை தேர்வு செய்தன.
60000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் உள்ளூர் வீரர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷனக, தனுஷ்க குணதிலக, திசர பெரேரா மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
நட்சத்திர டி20 துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க டிராஃப்டின் போது தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணித்தலைவர் துனித் வெல்லலகே யாழ்ப்பாண கிங்ஸால் வரைவு செய்யப்பட்டுள்ளார்.