ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
தனது கடற்றொழில் உபகரணங்களை சரிசெய்த பின்னர் கடலுக்கு செல்ல முற்பட்ட வேளையே அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இன்னொரு மீனவர் அவ்விடத்திற்கு சென்றபோது, சடலத்தை கண்டுள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஐஸ்பழ வீதி, குருநகரை சேர்ந்த திரகரி நைனாஸ் (57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1