கடந்த புதன் கிழமை (29) காலி கோட்டை பகுதியில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தை வலுக்கட்டாயமாக கலைப்பதற்கு இராணுவத்தினரை அனுப்பியமைக்கு எதிராக இரண்டு சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு சட்டத்தரணிகளான அமர திவாகர லியனாராச்சி மற்றும் ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குமார ஆகியோர் பிரதிவாதிகளாக இராணுவ தளபதி, காலி கோட்டை கட்டளை அதிகாரி, பாதுகாப்பு செயலாளர், பொது பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் உட்பட பலரை குறிப்பிட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பதாகைகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு தமது கருத்துச் சுதந்திரத்தை சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு தமது போராட்டத்தை முன்னெடுத்ததாக இரண்டு சட்டத்தரணிகளும் குறிப்பிடுகின்றனர்.
மேற்படி போராட்டம் கிரிக்கெட் போட்டிக்கோ அல்லது அதன் பார்வையாளர்களுக்கோ காலி கோட்டைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கோ எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தவில்லை என மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியவாறு காலி கோட்டைக்கு வந்து அமைதியான போராட்டத்தை வலுக்கட்டாயமாக கலைத்த போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரசன்னமாகியிருந்த நிலையில், எவ்வித அதிகாரமும் இன்றி இராணுவத்தினர் சென்றமை, சட்டவிரோதமானது எனவும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து எனவும் மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர். .
இராணுவ அதிகாரிகளின் நடத்தை இராணுவ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் பொலிஸ் அதிகாரங்களைப் பறிப்பதாகவும் மனுதாரர்கள் மேலும் தெரிவித்தனர்.
அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 11, பிரிவு 12(1), உறுப்புரை 14(1)(ஏ), பிரிவு 14(1)(பி) மற்றும் 14(1)(பிரிவு 14(1)) ஆகியவற்றால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள், பிரதிவாதிகளால் மீறப்பட்டுள்ளது.து என்று அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோருகின்றனர்.