பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம், ரி20 வீரர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் அதிக காலம் நீடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
பாபர் அசாம் ஐசிசி துடுப்பாட்ட தரவரிசையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் தற்போது அதிக நாள் ரி20 தரவரிசையில் முதல் இடத்தில் நீடித்து சாதனை படைத்துள்ளார்.
அவர் 1014 நாட்கள் முதல் இடத்தில் தொடர்கிறார். 1013 நாட்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய முன்னாள் கப்டன் விராட் கோலியின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
பாபர் அசாம் 818 புள்ளிகள் எடுத்து ரி20 துடுப்பாட்ட வீரர்கள தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஷ்வான் உள்ளார்.
ரி20 வடிவத்தில் மட்டுமின்றி ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையிலும் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1