கனேமுல்ல விஷேட அதிரடிப்படை முகாமின் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பாக பதவிவகித்த உப பொலிஸ் பரிசோதகர் இன்று (30) காலை தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலை 7 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
59 வயதான உப பொலிஸ் பரிசோதகரான குணசேகரன் என்பவரே உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1